தேவைகளை பூர்த்திசெய்ய தேடல்கள் அவசியமாகிறது

Saturday, October 22, 2016

அரசமரம்


மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்' என்பது எல்லாம் இன்று வாசகங்களாகவே இருக்கின்றன. மரம் வளர்ப்பிற்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்
பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்
பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம்
பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்
எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும்
நல்மரங்களை நடுகின்றாரோ அவரிடம்
தேவதைகளும் முனிவர்களும் தேவதைகளும் கந்தர்வர்களும்
மூன்று யுகங்களும் தங்கி அருள் புரிவர்
நன்றி : ச.திருமலைராஜன்
மரங்களின் செயல்பாடுகள்  
மரங்கள் சூரிய ஒளியில் இருந்து வரும் வெப்பத்தை உள்வாங்கி குளோரோபில் மூலம் காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சி புவிவாழ் உயிரினங்களுக்கு ஆக்ஸிஜனை வெளியிடுகிறது
நம் முன்னோர்கள் 
இதனால் தான் நம முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபடடார்கள். அப்படி நம் முன்னோர்கள் வழிபட்ட மரங்களுள் அரச மரமும் ஒன்று
அழிந்து வரும் மரங்கள்:  
முன்பெல்லாம் சாலையோரங்களில் ஆலமரமும், அரச மரமும், புளிய மரமும் அதிகமாக காணப்படும். கிராமங்களிலும் இந்த மரங்களை அதிகளவில் பார்க்கலாம். இதில் ஆலமரத்துக்கும், அரச மரத்துக்கும் இடம் அதிகம் தேவை. இதைக்கருத்தில் கொண்டு ஆல, அரச மரங்களை வளர்க்க யாரும் முன்வருவதில்லை. இதனால் இந்த மரங்கள் அழிந்து வருகின்றன.
மரங்களின் அரசன் அரசமரம்
பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. அனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு தன் சிறப்பு அதிகம். 
பூர்வீகம் 
அரசமரம் நீண்டு நெடிய மரம்,அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. 'மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்" என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான். புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன. 
அரச மரத்திற்கு வேறு பெயர்களும் உண்டு அவை :
அஸ்வத்தம்,
அச்சுவத்தம்,
திருமரம்,
போதிமரம் 
கவலை,
பேதி,
கணவம்,
சராசனம்,
மிப்பலம் என பல பெயர்கள் உண்டு. 
அரச மரத்தை சுற்றுவதால் வரும் நன்மைகள் 
7 முறை சுற்றினால் இஷ்ட சித்தி. 
9 முறை சுற்றினால் காரிய ஜயம். 
11 முறை சுற்றினால் சற்குணம் உண்டாகும். 
13 முறை சுற்றினால் புத்திர பிராப்தி. 
15 முறை சுற்றினால் ஆயுள் அபிவிருத்தி. 
108 முறை சுற்றினால் தன பிராப்தி, தன விருத்தி. 
1008 முறை சுற்றினால் அஸ்வமேத யாக பலன் கிடைக்கும். 

ஞாயிறு: ஞாயிறு அன்று அரச மரத்தை வலம் வந்து சூரியனைப் பிரார்த்தனை 
செய்தால் எல்லாவிதமான துன்பங்களும் விலகும். 
திங்கள்: திங்கட்கிழமை சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து அரசமரத்தை வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். 
செவ்வாய்: செவ்வாய்க்கிழமை அன்னை உமா தேவியை அர்ச்சித்து அரச மரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்தியோக உயர்வு முதலான பல்வேறு வெற்றிகளும் எளிதில் அடையலாம். 
புதன்: புதன்கிழமை தேவகணங்களை நமஸ்கரித்து அரச மரத்தை வலம் 
வருபவர்களுக்கு விரும்பிய லாபங்கள் கிடைக்கும். வர்த்தகர்களுக்கு 
சுபிட்சம் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. 
வியாழன்: வியாழன் அன்று தட்சிணாமூர்த்தியை வணங்கி அரச மரத்தை
பிரதட்சிணம் செய்தால் கல்வி ஞானமும் கீர்த்தியும் பெற முடியும். 
வெள்ளி: வெள்ளிக்கிழமை லட்சுமியை நமஸ்கரித்து அரச மரத்தை வலம் வந்தால் அமோக ஐஸ்வரியமும் யோக சுபிட்சங்களும் குவியும். 
சனி: மகாவிஷ்ணுவிற்கு நைவேத்தியங்கள் செய்து வணங்கி, அரச மரத்தை வலம் வந்தால் சர்வ துக்கமும் போகும்.
பிராணவாயு 
நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர். இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம். 
விஞ்ஞான உண்மை
அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. இதன் காரணமாகவே “அரசினை நம்பி புருசனை கைவிட்டாள்" என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளளது. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது 'அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் "என்ற பழமொழி உண்டு. இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப் பேற்றை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும். அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு. 

மரம் வளர்ப்போம் மழை  பெறுவோம் 
மரம் வளர்ப்போம்  அறம் வளர்ப்போம் ...........

No comments: